டிரம்ப் அமெரிக்கர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றார்
அமெரிக்கா புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களை திசை திருப்புவதற்கு முயற்சித்து வருவதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கனடாவை 51 வது மாநிலமாக அறிவிக்கும் இந்த முயற்சி மக்களை திசை திருப்புவதற்கானது என தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக தற்பொழுது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.
கனடிய ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படும் வரி அமெரிக்க நுகர்வோரை எவ்வாறு மோசமாக பாதிக்கும் என்பதனை தெரிந்து கொண்டு அதை மூடி மறைக்கும் நோக்கில் ட்ரம்ப் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிக்கப்பட்டால் அதற்கு உரிய பதிலடி வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் கையாண்ட அணுகுமுறைகள் பின்பற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்த தெளிவான விபரங்களை வெளியிடவில்லை.