ஈரானுக்கு எதிராக கடும் தடைகள் ; ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையை மூடி உலக நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளால் ஈரான் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், அந்நாட்டுக்கு வருமானம் கிடைப்பதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்துகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.
உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிசக்தி போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிலைமை காரணமாக, சர்வதேச சந்தைகளிலும் அதன் தாக்கம் குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.