சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரை சந்தித்தார் டொனால்ட் டிரம்ப்
4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
தனி விமானம் மூலம் ரியாத் வந்த டிரம்பை சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
அதன்பின் டொனால்டு டிரம்பும், முகமதுபின் சல்மானும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஈரான் விவகாரம், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
சவுதி பயணத்தை நிறைவு செய்தப்பின் டிரம்ப் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார். டிரம்பின் மத்திய கிழக்கு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.