ட்ரம்பின் புதிய வரி கொள்கை அமுல் ; இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 10% வரி

Donald Trump Sri Lanka United States of America Import Income Tax Return
By Sahana Jul 24, 2026 03:19 AM GMT
Report

அமெரிக்காவின் தற்காலிக 10% உலகளாவிய இறக்குமதி வரி நடைமுறை காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.

கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் (Forced Labor Laws) போதுமான அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அமெரிக்காவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய வரி நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் புதிய வரி கொள்கை அமுல் ; இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 10% வரி | Trump New Tax Policy Come Effect 10 Tax Sri Lankan

புதிய அறிவிப்பின்படி, இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது.

இதேபோன்று ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட பல நாடுகளின் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனா உள்ளிட்ட 38 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மொத்தம் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களுக்கும் இந்த புதிய வரி நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர இறக்குமதி வரிகள்" (Reciprocal Tariffs) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

எனினும், அந்த வரி நடைமுறையை அமெரிக்க உயர்நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளித்து ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து, இடைக்கால நடவடிக்கையாக 150 நாட்கள் காலத்திற்கு அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக 10% தற்காலிக இறக்குமதி வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

அந்த தற்காலிக வரி நடைமுறை இன்று நிறைவடையும் நிலையில், அதற்குப் பதிலாக நாடுவாரியாக புதிய வரி அமைப்பை அமெரிக்க நிர்வாகம் அமுல்படுத்தியுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை, அமெரிக்க உற்பத்தித் துறையை வலுப்படுத்துதல், வர்த்தகப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல் மற்றும் "உலகளாவிய வரி" தொடர்பான தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பொருளாதாரக் கொள்கை முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதனிடையே, புதிய இறக்குமதி வரிகள் அமுலுக்கு வந்ததன் பின்னர் இலங்கை உள்ளிட்ட பல ஏற்றுமதி நாடுகளின் ஆடை, விவசாயம் மற்றும் உற்பத்திப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் எந்தளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என்பது குறித்து சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US