கமலா ஹாரிஸ் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப் ; இணையத்தில் வைரலான புகைப்படம்

Donald Trump Kamala Harris Viral Photos Election
By Sahana Aug 02, 2024 07:22 PM GMT
Report

டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸக்கு இடையே சர்ச்சைக்குறிய கருத்து வேறுபாடுக்கு இடையே கமலா ஹாரிஸின் இந்திய பாரம்பரிய புகைப்படம் ஒன்றை டிரம்ப் இணையத்தில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

கமலா ஹாரிஸ் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப் ; இணையத்தில் வைரலான புகைப்படம் | Trump Releases Family Photo Of Kamala Harris

இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், சிகாகோவில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்கத்தின் மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் மீது இனவெறி கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில்," கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கருப்பினத்தவராக மாறும் வரை அவர் கருப்பினத்தவர் என்று எனக்குத் தெரியாது.

கமலா ஹாரிஸ் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப் ; இணையத்தில் வைரலான புகைப்படம் | Trump Releases Family Photo Of Kamala Harris

கமலா ஹாரிஸ் தற்போது கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரியவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் அவர் வெளிப்படையாக இல்லை.

ஏனென்றால் அவர் எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தார். பின்னர் திடீரென்று கருப்பினத்தவராகி விட்டார். இந்த நாட்டின் கருப்பின மக்களை நேசிக்கிறேன். கருப்பின மக்களுக்காக நான் பல நன்மைகள் செய்துள்ளேன்.

ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான்தான் என்றார்.

கமலா ஹாரிஸ் மீதான டிரம்ப்-ன் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது, ஒருவரை அவர்கள் யார், அவர்கள் எப்படி அடையாளம் காட்டுகிறார்கள் என்பதைச் சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. டிரம்ப் கருத்து வெறுக்கத்தக்கது மற்றும் அவமதிப்பு ஆகும்" என்றார்.

இந்நிலையில், இந்த சர்ச்சை கருத்துகளுக்கு இடையே, டிரம்ப், கமலா ஹாரிஸின் இந்திய பாரம்பரிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்துடன், "பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் அனுப்பிய அருமையான புகைப்படத்திற்கு நன்றி கமலா.

கமலா ஹாரிஸ் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப் ; இணையத்தில் வைரலான புகைப்படம் | Trump Releases Family Photo Of Kamala Harris

உங்களின் அரவணைப்பு. இந்திய பாரம்பரியத்தின் மீதான உங்கள் அன்பு மிகவும் பாராட்டுக்குரியது" என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

கமலா ஹாரிஸின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கமலா ஹாரிசின் தாய் இந்தியாவை சேர்ந்தவர்.

தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US