இந்தியாவிற்கு ட்ரம்ப் விதித்த கால கெடு; 24 மணி நேரத்தின் பின் காத்திருக்கும் அதிர்ச்சி
'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாக அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.
இதனால், அந்நாட்டின் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரியை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் உயர்த்தப் போகிறேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மறைமுக எச்சரிக்கை
இதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் முடிவை மாற்றிக் கொள்ளும்படி, இந்தியாவுக்கு அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அளித்த பேட்டியில் இந்தியா ஒரு நல்ல சிறந்த வர்த்தக கூட்டாளி அல்ல. எங்களுடன் அந்நாடு நிறைய வர்த்தகம் செய்கிறது. நாங்கள் குறைந்த அளவிலேயே செய்கிறோம்.
இந்திய பொருட்களுக்கு, 25 சதவீத வரியை நிர்ணயித்தோம். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அந்நாடு நிறுத்தாததால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த வரியை மேலும் கடுமையாக அதிகரிக்கப் போகிறேன். ரஷ்யாவின் போர் நெருப்பில், இந்தியா எண்ணெய் ஊற்றுகிறது என அவர் கூறியுள்ளார்.