ட்ரம்பின் வரி கொள்கைகளால் உலகளவில் வர்த்தகம் சரியும் அபாயம்
அமெரிக்க அதிபர் டிரம்ப், இம்மாதம் தொடக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரியை அறிவித்தார்.
இந்த நிலையில் உலக வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மாறிவரும் வரிக் கொள்கைகள் மற்றும் சீனாவுடனான மோதல் காரணமாக உலகளவில் பொருட்களின் வர்த்தக அளவு இந்த ஆண்டு 0.2 % குறைய வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டபட்டுள்ளது.
வட அமெரிக்க வர்த்தகத்தில் சரிவு
வரிகள் இல்லாவிட்டாலும் வட அமெரிக்காவில் வர்த்தகத்தில் சரிவு இருக்கும்.
இந்த ஆண்டு அங்கு ஏற்றுமதி 12.6 % இறக்குமதி 9.6 % குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் 2025 மற்றும் 2026 ம் ஆண்டுகளில் உலக வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டிரம்பின் வர்த்தகப் போர் பொருளாதார வல்லுநர்களின் கணிப்பை கணிசமாக குறைக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. நிச்சயமற்ற தன்மையினால், பெரும்பாலான நாடுகள் மீதான தனது கடுமையான வரிகளை டிரம்ப் பின்பற்றினால், உலகளவில் பொருட்களின் வர்த்தகம் 1.5% ஆக குறையும்.
70க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி தீர்வு காண வாய்ப்புள்ளது. ஆனால் டிரம்ப் தனது கடுமையான பரஸ்பர வரிகளை தொடர்ந்தால் அது மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.