விமானத்தில் ஏறுகையில் தடுமாறிய டிரம்ப்; வைரலாகும் காணொளி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.
இதன்போது விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் டொனால்டு டிரம்ப் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறினார். படிக்கட்டில் கீழே விழுவதுபோல் கால் தடுமாறிய டிரம்ப் உடனடியாக சுதாரித்துக்கொண்டார்.
பின்னர், அவர் பட்டிக்கட்டில் ஏறி விமானத்திற்குள் நுழைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Donald Trump can’t walk up a flight of stairs, he’s unfit to be President.
— Ryan Shead (@RyanShead) June 8, 2025
…am I doing it right? 👀😂 pic.twitter.com/09x0OdcM77
அதேவேளை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் விமானத்தில் ஏறும்போது அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.