கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்!
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த நாட்டிற்கான புதிய கட்டண விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கு வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூறி அந்நாட்டை ட்ரம்ப் சீண்டியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க தொழிநுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது.
இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.