கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கும் விடயம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கும் விடயத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிய விடயத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, கனேடிய மக்கள் அமெரிக்கப் பொருட்களையும், அமெரிக்க சுற்றுலாவையும் புறக்கணித்துவருகிறார்கள்.
இந்நிலையில், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்குவது குறித்து மீண்டும் பேசியுள்ளார் ட்ரம்ப்.
நேற்று அமெரிக்க ராணுவத் தலைவர்கள் முன் உரையாற்றினார் ட்ரம்ப். அப்போது, அமெரிக்காவின் Golden Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டம் குறித்து பேசிய அவர், சில வாரங்களுக்கு முன் கனடா தரப்பிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அவர்களும் இந்த பாதுகாப்புத் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார் ட்ரம்ப்.
அதைத் தொடர்ந்து, அப்படியானால், கனடா ஏன் அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணையக்கூடாது? Golden Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டம் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்குமே என்று மீண்டும் கூறியுள்ளார் ட்ரம்ப்.