கிம் ஜோங் உன்னை சந்திக்க விரும்பும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை (Kim Jong-un) இந்த ஆண்டு சந்திக்க விரும்புவதாகச் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கைச் (Lee Jae-myung)சந்தித்தபோது டிரம்ப் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் ஒரே பிளவுபட்ட நாடாக இருக்கும் இரு கொரியாக்களுக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுக்குமாறு லீ, டிரம்ப்பிடம் கேட்டுக்கொண்டார்.
ஜூலை மாதத்தில் அமெரிக்கா - தென் கொரியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இருப்பினும் அணுச்சக்தி, ராணுவச் செலவு, முதலீடுகள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு தொடர்கிறது.
அதேவேளை தென் கொரியப் பொருளாதாரம் அமெரிக்காவை பெருமளவில் சார்ந்துள்ளது. அமெரிக்க ராணுவப் பாதுகாப்பைத் தென் கொரியா சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாய்த் டிரம்ப் குறைகூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.