பனாமா கால்வாயை கையகப்படுத்த நினைக்கும் டிரம்ப்!
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மத்திய அமெரிக்கா ஊடாக செல்லும் அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் மீது பனாமா அதிக வரியை விதிப்பதாகவும் டிரம் குற்றம் சாட்டியுள்ளார்.
அரிசோனா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் பனாமா கால்வாயில் சீனாவின் செல்வாக்கு குறித்து எச்சரிக்கும் வகையில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பேரணியின் பின்னர், டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாய் மீது அமெரிக்கக் கொடியின் படம் இருக்கும் வகையிலான புகைப்படத்தை தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டு அமெரிக்கக் கால்வாய்க்கு வரவேற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.