கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன் ; ட்ரம்ப்
கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கரீபியனில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. அந்நாட்டின் அதிபராக மிகுல் டியாஸ் கனெல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

வெனிசுலா தாக்குதல்
அதேவேளை, கியூபாவுக்கு வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தன. சமீபத்தில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தது.
இதையடுத்து, வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்ரம்ப் மிரட்டலை தொடர்ந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதை மெக்சிகோ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.