அடுத்த வாரம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடவுள்ள டிரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் அடுத்த வாரம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
வரும் செவ்வாய்க்கிழமை (15 நவம்பர்) புளோரிடா மாநிலத்தில் உள்ள தமது Mar-a-Lago இல்லத்திலிருந்து அந்த அறிவிப்பை விடுக்கப்போவதாக அவர் சொன்னார்.
2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இன்று அமெரிக்காவில் இடைத்தவணைத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
435 மக்களவைத் தொகுதிகளுக்கும் 100 செனட் சபை இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தவகையில் 36 மாநிலங்களின் ஆளுநர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவிருக்கின்றனர்.
மேலும் இன்றைய இடைத்தவணைத் தேர்தலில் 250 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.