மலேசியாவில் நடனமாடி அசத்திய ட்ரம்ப் ; வைரலாகும் வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2-வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய ட்ரம்ப் மலேசியா தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.

வாஷிங்டனில் இருந்து 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு கோலாலம்பூரில் வந்திறங்கிய டிரம்ப்புக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான ஓடுபாதையில் மலேசியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்த நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ப் நடனமாடினார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் அதிபரும் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
The Trump dance in Malaysia! 😎
— Libs of TikTok (@libsoftiktok) October 26, 2025
How can you not love this man 🤗pic.twitter.com/DLhOR4S4TH