ஸ்கார்பரோ மசூதிக்குள் அத்துமீறி மிரட்டல் விடுத்த இளைஞர்கள் இருவர்
ஸ்கார்பரோ மசூதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞர்கள் இருவர் மீது ரொறன்ரோ பொலிசார் பல பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது பிஞ்ச் அவென்யூ கிழக்கு மற்றும் நீல்சன் சாலை அருகே நடந்துள்ளது. மதிய நேரத்திற்கு சற்று முன்னர் ரொறன்ரோ இஸ்லாமிய கல்வி நிலையத்தில் இருந்து பொலிசாருக்கு தகவல் சென்றுள்ளது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசார், குறித்த மசூதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இருவரை கைது செய்துள்ளனர்.
ஒருவர் 24 வயதுடைய ஆண் எனவும் இன்னொருவர் 22 வயதுடைய பெண் எனவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இருவர் மீதும் பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவல் தொடர்பாக மூடப்பட்டும், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் உள்ள அந்த மசூதியில் இவர்கள் அத்துமீற காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிசார் கருத்து கூற மறுத்துள்ளனர்.
கடந்த 6ம் திகதி ஒன்ராறியோவின் லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு இஸ்லாமியர்கள் வாகனம் மோதவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் இஸ்லாமிய சமூகத்தினர் அச்சத்தில் உள்ளனர்.