ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! 26 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கில் உள்ள பக்திஸ் மாகாணத்தில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் சக்தி வாய்ந்த நநிலநடுக்கம் ஏற்பட்டது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, துர்க்மெனிஸ்தான் என்ற பகுதியில் மாலை 4 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு நிலநடுக்கங்களால் குடியிருப்புக் கட்டடங்கள், வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்துள்ளன.
நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடினர்.
இந்த இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 26 பேர் இதுவரை உயிரிழந்துடன் பலர் காயமடைந்து உள்ளன என்று தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்தாகும்.