கின்னஸ் சாதனை படைத்த குறைமாத இரட்டைக்குழந்தைக்கு பிறந்தநாள்! வாழ்த்துக்களை குவிக்கும் இணையவாசிகள்
உலகிலேயே மிகமிக குறைந்த மாதத்தில் பிறந்த இரட்டையரான கனடாவில் பிறந்து சாதனை படைத்துள்ளனர்.
கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதி நடராஜா - ஷெகினா ராஜேந்திரம். என்ற தம்பதிகளுக்கு இவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இரட்டை குழந்தைகள்
கர்ப்பந்தரித்த 21 வாரங்கள் மற்றும் 5 நாட்களிலேயே ஷெகினாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் 0% தான் இருப்பதாக கூறிவிட்டனர்.
இருப்பினும் 266 நாட்களுக்கு பிறகு பிறக்கவேண்டிய குழந்தைகள் 152 நாட்களிலேயே பிறந்ததுதான் இங்கு மருத்துவர்கள் மற்றும் பெற்றோருக்கு சவாலாக அமைந்தது.
இவர்களுக்கு அடியா லாய்லின் மற்றும் ஆட்ரில் லூக்கா என்று பெயரிடப்பட்டது.
420 கிராம் எடையுடைய ஆட்ரிலின் பிறப்பதற்கு 23 நிமிடங்கள் முன்பு பிறந்த ஆடிலா வெறும் 330 கிராம் எடையுடன் பிறந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்த்தே மொத்தம் 750கிராம் எடையுடன் மட்டுமே பிறந்துள்ளனர்.
அதனால் இவர்கள் “உலகிலேயே மிகமிக குறைந்த மாதத்தில் பிறந்த இரட்டையர்” மற்றும் மிகவும் லேசான(எடை குறைந்த) குழந்தைகள் என்ற ரெக்கார்டை பதிவு செய்துள்ளனர்.
பிறந்தநாள்
இந்நிலையில் இவர்கள் தங்களது முதலாவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு இணையவாசிகள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Happy birthday to twins Adiah and Adrial, new record holders for being the most premature twins ???? pic.twitter.com/X2h5G5EQrZ
— Guinness World Records (@GWR) March 4, 2023