சுழன்றடித்த சூறாவளியால் பலர் மரணம்: இருளில் மூழ்கிய இரு மாகாண மக்கள்
அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளியால் இரு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பெருவெள்ளம் மற்றும் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பலத்த காற்று மற்றும் சூறாவளியால் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டென்னசி மற்றும் கென்டக்கி மாகாணங்களில் வெள்ளிக்கிழமை வீசிய புயலில் 750,000 வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு, குடிநீருக்கு என அவதிப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நியூ இங்கிலாந்து நோக்கி புயல் நகர்வதாகவும், இதனால் பனிப்பொழிவும் மழையும் குறித்த பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி தேசிய வானிலை ஆய்வு மையமானது பனிப்புயல் தொடர்பிலும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாசசூசெட்ஸ் மற்றும் ரோட் தீவில் கடலோரத்தில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும்,
புயல் காரணமாக நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மைனேயின் சில பகுதிகளில் 18 அங்குலம் அவரையில் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ட்லேண்டில் உள்ள விமான நிலைய அதிகாரிகள் கடுமையான வானிலை காரணமாக சனிக்கிழமை பல விமானங்களை ரத்து செய்தனர்.