டுவிட்டர் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய எலான் மஸ்க்!
சுமார் 7500 ஊழியர்கள் டுவிட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைக்கப்படும்.
டுவிட்டர் ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், டுவிட்டரின் உரிமையாளர் ஆக உள்ள எலான் மஸ்க்(Elon Musk), பணியாளர்களின் எண்ணிகையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும், மூன்று ஆண்டுகளில் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
அதன்படி, தற்போது சுமார் 7500 ஊழியர்கள் டுவிட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைக்கப்படும்.
இது குறித்து, டுவிட்டர் நிறுவனத்தின் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட்(Sean Edgett) தங்கள் நிறுவன தொழிலாளர்களிடம் கூறுகையில், "டுவிட்டர் ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெற உள்ளது.
இந்த நிலையில், டன் கணக்கில் இதுபோன்ற பொது வதந்திகள் மற்றும் ஊகங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்" என்று எச்சரித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மெமோவில் கூறுகையில், "டுவிட்டர் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி தொடர்பான விவாதங்கள் நிறுத்தப்பட்டன.
மேலும் இணைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால், நிறுவனம் முழுவதும் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.