வெளிநாடொன்றில் 2 படகுகள் மோதி பயங்கர விபத்து ; 30 பேர் பலி ; பலர் மாயம்
காங்கோவில் ஈக்வேட்டர் மாகாணத்தின் கோம்பே-லுகோலேலா பகுதிக்கு அருகே, ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட மரப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன என மாகாண உள்துறை அமைச்சர் கிரிஸ்பின் மபுட்டு தெரிவித்தார்.
விபத்து நடந்த உடனேயே உள்ளூர் நிர்வாகமும் மீட்புக் குழுக்களும் களமிறக்கப்பட்டன என்றும் இதில் 30 பேர் உயிரிழந்ததாவும், பலர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு படகுகளும் எப்படி மோதிக்கொண்டன என்றும் விபத்துக்கான சரியான காரணம் என்ன என்றும் இன்னும் தெரியவில்லை.
விபத்தில் உயிரிழந்த 30 பேரின் இறுதிச் சடங்குகள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு படகு வடமேற்கில் உள்ள உபாங்கியிலிருந்து தலைநகர் கின்ஷாசாவுக்கும், மற்றொன்று கின்ஷாசாவிலிருந்து விபத்து நடந்த லுகோலேலா பகுதிக்கும் சென்று கொண்டிருந்தது என்றும் தேடுதல் பணிகள் தொடர்வதாகவும் அமைச்சரை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உபாங்கியிலிருந்து திரும்பி வந்த படகில் அளவுக்கு அதிகமாகப் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன என்று ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்