லண்டனில் வீடு ஒன்றில் இருந்து இரு சிறுவர்கள் சடலமாக மீட்பு!
கிழக்கு லண்டனில் உள்ள டேகன்ஹாமில் வீடு ஒன்றில் இரு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மற்றும் ஐந்து வயதுடைய சிறுவர்கள் கார்ன்வாலிஸ் சாலையில் உள்ள குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
மேலும் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தினர். சுமார் 14:00 GMT மணிக்கு அழைக்கப்பட்ட பின்னர் காவல்துறை மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சிறுவர்கள் உயிரிழந்தமை குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆதரவளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணும் ஆணும் இரு குழந்தைகளுக்கும் நன்று தெரிந்தவர்கள் என்று பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த பெண் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குறித்த ஆண் சந்தேகநபர் சம்பவ இடத்திற்கு அருகாமையில் கைது செய்யப்பட்டதாக மெட் பொலிசர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.