டொரண்டோவில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூடு
டொரண்டோ நகரத்தின் ரிவர்டேல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கான இரண்டு சந்தேகநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லோகன் அவென்யூ அருகே உள்ள பெயின் அவென்யூவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இரண்டு ஆண்களை மீட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும் மற்றொருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் அங்கே உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு சந்தேகநபர்கள் இருவரும், இருண்ட ஆடைகளை அணிந்து, வித்ரோ பார்க் நோக்கி ஓடிச் சென்றதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.