நடுங்கவைக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட இருவர்
கனடாவின் ஸ்கார்பாரோ பகுதியில் ஞாயிறு இரவு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான இருவர் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் டான்ஃபோர்த் சாலை மற்றும் டிக்கெட்வுட் டிரைவைச் சுற்றியுள்ள பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதாக ரொறன்ரோ பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடும் இருவரை மீட்டுள்ளனர்.
ஆனால் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், குறித்த இருவரும் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில், திங்கட்கிழமை பகல் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில்,
மரணமடைந்த இருவரும் ரொறன்ரோ வாசிகள் எனவும், ஒருவர் 25 வயது Daniel Fung எனவும் இன்னொருவர் 23 வயது Mohamed Moallim என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் மூவரை கைது செய்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் கைது நடவடிக்கையானது கொலை வழக்கு தொடர்பானது அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் இந்த வழக்கு தொடர்பில் பொலிசாரை நாட கேட்டுக்கொண்டுள்ளனர்.