கனடாவில் 15 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் மீது கொலை குற்றச்சாட்டு
கனடாவின் மன்றையால் நகரில் 15 வயதான சிறுமி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மொன்றியாலின் கிங் சிட்டி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் படுகொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
18 வயதான ஸகரி ராம்நாத் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டிருந்தார், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என போலீசார் முன்னதாக அறிவித்திருந்தனர்.
பின்னர் விசாரணைகளின் அடிப்படையில் இது ஓர் படுகொலை சம்பவம் என பிரேத பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் சந்தேகிக்கப்படும் 15 வயது சிறுமி மிஸ்ஸசாகாவைச் சேர்ந்தவர் எனவும் அவரை கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் திகதி கைது செய்ததாகவும், மற்றும் ஒரு 19 வயது இளைஞர் ஒருவரை போலீசார் ஜூலை மாதம் ஐந்தாம் ◌திகதி கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்கு எதிராகவும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த படுகொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.