கியூபெக்கில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 பேர் பலி
கியூபெக்கில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாகாணத்தின் இரு வேறு இடங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் நகரிற்கு அருகாமையில் அமைந்துள்ள சென் கிளிச்சே பகுதியில் ஓர் விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தில் பயணம் செய்த சாரதி தூக்கி வீசி எறியப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சென் லோரன்ஸ் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் கார் ஒன்றும் ட்ரக் வண்டியும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த இரண்டு விபத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.