பிரான்ஸ் பாடசாலையில் இரு மாணவர்களின் செயலால் ஏற்பட்ட பரபரப்பு!
பிரான்ஸில் இரண்டு மாணவர்களிற்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்துவரை சென்ற பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பற்றுள்ளது.
இந்த நிலையில் கொலை முயற்சிக்காக 15 வயது மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராற்றில் இயரிலுள்ள (Hyères - Var) தொழில் முறை லிசேயான lycée professionnel Golf Hôtel இல் கல்வி கற்கும் ஒரு மாணவன் தனது சக மாணவனை பல முறை கத்தியால் குத்திக் கொலை முயற்சி செற்துள்ளார்.
அதன்படி உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் வன்முறைத் தாக்குதல் மேற்கொண்ட 15 வயது மாணவனைக் கைது செய்துள்ளனர். இவர் மீது கொலை முயற்சிக் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் தான் கத்தியால் பலமுறை குத்தியதாக ஒப்புதல் வாக்குமூலமும் வழங்கி உள்ளார்.
மேலும் கத்திக்குத்திற்கு இலக்காகிய அதே வயதுடைய மாணவன் உடனடியாக பெரும் உயிர் ஆபத்தில் இருந்ததாகவும், தற்போது சிறிது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், உயிராபத்து சிறிது நீங்கி உள்ளதாகவும், ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.