கனடாவில் மதுபான விடுதிக்கு வெளியே கத்திக்குத்து – இருவர் தீவிர சிகிச்சையில்!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பிராண்ட்போர்ட் பகுதியில் உள்ள மார்க்கெட் வீதி மதுபான விடுதிக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற கத்திக்குத்துச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் முதற்கட்ட தகவல்களின்படி, இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவர் மற்றும் சந்தேகநபர் உட்பட மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சம்பவ இடத்தில் இருந்து வயது வந்த ஆண் நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், சந்தேகநபர் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் தற்போது வரை தெரியவரவில்லை எனக் கூறியுள்ளனர்.

இது தொடர்பாகப் பிராண்ட்போர்ட் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இச்சம்பவத்தைக் கண்ட சாட்சிகள் யாரேனும் இருப்பின் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கண்காணிப்பு கேமராக்கள், டோர்பெல் அல்லது வாகனங்களின் டேஷ்கேம் பதிவுகளைப் பரிசீலித்து, ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 519-756-7050 என்ற எண்ணில் பிராண்ட்போர்ட் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணை தொடரத் தொடர வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.