கனடாவில் வாகன விபத்தில் சிக்கி 2 வயது குழந்தை பரிதாப மரணம்
கனடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த துயர சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை ரொபிலார்ட் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதி எங்கிலிஹர்ட் நகரத்திற்கு அருகிலும், கிரிக்லன்ட் நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

கிராமப்புற வீட்டின் முன்புற பாதையில் (driveway) ஒரு பயணிகள் வாகனம் சிறிது தூரம் நகர்த்தப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்த வாகனத்தை இயக்கியவர் குழந்தை வாகனத்தில் இல்லை என்பதை அறியாமல் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.