வியட்நாமில் புயலால் வெளிப்பட்ட புதையல்; பல நூற்றாண்டு பழமையான கப்பல் சிதைவுகள்
வியட்நாமில் கல்மேகி (Kalmaegi) புயலால் ஏற்பட்ட கடுமையான கடலோர அரிப்பால் பல நூற்றாண்டுப் பழமையான கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அது முதலில் 2023ஆம் ஆண்டு ஹொய் ஆன் கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த 17.4 மீட்டர் அகலக் கப்பலை அதிகாரிகள் மீட்பதற்கு முன்பு அது மீண்டும் கடலுக்குள் மறைந்தது.

இந்நிலையில் வியட்நாமில் கல்மேகி (Kalmaegi) புயலால் ஏற்பட்ட கடுமையான கடலோர அரிப்பால் அது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அதைப் பாதுகாப்பாக அகற்ற ஆய்வாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கப்பல் 14ஆம் நூற்றாண்டுக்கும் 16ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
குறித்த கப்பல் வலுவான பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் அது நீண்ட தூரப் பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஹொய் ஆன் பாதுகாப்பு நிலையம் கூறியது.