கனடியர்களினால் பெருந்தொகை வருமானத்தை இழந்த அமெரிக்கா
அமெரிக்காவுக்கான சுற்றுலா பயணத்தை பல கனேடியர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதால், அமெரிக்க பொருளாதாரம் பெரும் நட்டத்தை சந்தித்து வருகிறது.
அமெரிக்க சுற்றுலா சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலா வருமானத்தில் 3.2% வீழ்ச்சி ஏற்பட்டு, இது கடந்த ஆண்டைவிட 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு கனேடியர்கள் அமெரிக்கா செல்லாமல் இருப்பதே குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப், கனடாவை “அமெரிக்காவின் 51வது மாநிலம்” எனக் குறிப்பிடுவது மற்றும் வர்த்தக போரைத் தொடங்கியது கனேடியர்களை கோபமடையச் செய்ததாக கூறப்படுகிறது.
2025 அக்டோபர் மாதத் தரவுகளின்படி, கனேடியர்களின் அமெரிக்கா விமானப் பயணங்கள் 24% மற்றும் நிலப் பயணங்கள் 30% வீழ்ச்சி கண்டுள்ளன. இதுவே தொடர்ச்சியாக பத்தாவது மாதமாகும்.