நெதன்யாகுவுடன் உரையாடிய புடின் ; போர் நிறுத்தம் குறித்து பேச்சு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் நேற்று தொலைபேசியில் உரையாடினர்.
ரஷ்யா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் சூழலில் காசாவில் நடந்த போர் நிறுத்தம் குறித்து நேதன்யாகுவிடம் புதின் பேசியுள்ளார்.

தொலைபேசி உரையாடல்
நேதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலில் மத்திய கிழக்கு அரசியல் குறித்து புதின் விவாதித்ததாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் சிரியாவில் உள்ள அரசியல் நிலைமை குறித்தும் இருவரும் விவாதித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் அக்டோபர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன் படி, ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் என்றும், இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் என்றும் முடிவு எட்டப்பட்டது.
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் அக்டோபர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்ததிலிருந்து, ஹமாஸ் 25 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. இஸ்ரேலிடம் இருந்து இதுவரை 315 பாலஸ்தீனர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், இஸ்ரேல் ஒருதலைப்பட்ச தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த அக்டோபர் 23 முதல், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 69,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.