கனடாவில் குழந்தைகளுக்கான பால் மா குறித்து எச்சரிக்கை
கனடாவில் குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
ஒரு குழந்தை பால் மா தயாரிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கனடிய உணவு ஆய்வு அமைப்பு (CFIA) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பாட்டுலிசம் நோய் பரவலுடன் தொடர்புடையதாக கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
பைஹார்ட் நிறுவனம் (ByHeart), அமெரிக்காவில் விற்பனையான அதன் அனைத்து தயாரிப்புகளையும் நவம்பர் 11ஆம் திகதி திரும்பப் பெற்றது.
இதற்கு முன்னர், சில தயாரிப்புகள் குழந்தைகளில் பாட்டுலிசம் நோயை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட பின்னணியில் அவை வாபஸ் பெறப்பட்டிருந்தன.
680 கிராம் கன்டெய்னர், 238 கிராம் பாக்கெட் ஆகியனவே இவ்வாறு திரும்பப்பெறப்பட்டுள்ளன.
நச்சுத்தன்மையினால் பாதிக்கப்பட்ட உணவுகள் தோற்றத்தில் அல்லது மணத்தில் கெட்டுப்போனதாக தெரியாமல் இருந்தாலும், இது கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த தயாரிப்பை உண்ண வேண்டாம், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம், விற்பனை செய்ய வேண்டாம், பயன்படுத்த வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.