விபத்தில் சிக்கிய அமெரிக்கவின் போர் விமானம் ; பலி எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்
ஈராக்கிற்குள் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 'Boeing KC-135 ரக விமானத்தில் இருந்த பணியாளர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் ஆறு அதிகாரிகள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் மேற்கு வான்பரப்பில் வழமையான பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவ வானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற போது மொத்தம் ஆறு பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரின் நிலை குறித்து மேலதிக தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.