பிரித்தானியாவில் புதிதாக 330 பேர் கொரோனாவால் பலி!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 330 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 56 இலட்சத்து 13 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 202 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 36 இலட்சத்து 9 ஆயிரத்து 207 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 675 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 12 ஆயிரத்து 551 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரத்து 873 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.