கொரோனா பாதிப்பு தொடர்பில் பிரித்தானிய எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
எதிர்வரும் புத்தாண்டில் இருந்து கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடப்போவதில்லை என பிரித்தானிய அறிவித்துள்ளது.
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், பலமுறை உருமாறி உலக நாடுகளை அலையலையாக தாக்கி வருகிறது.
இதில் நாளாந்தம் தங்கள் நாட்டில் ஏற்படும் பாதிப்பு விவரங்களை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.
ஆனால் இந்த விவரங்களை வருகிற புத்தாண்டில் இருந்து வெளியிடப்போவதில்லை என பிரித்தானிய அறிவித்து இருக்கிறது.
இது தொடர்பில் பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவன தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைவர் நிக் வாட்கின்ஸ் கூறுகையில்,
'தொற்றுநோய்களின் போது, ஆர் மதிப்பு மற்றும் வளர்ச்சி விகிதம் ஆகியவை பொது சுகாதார நடவடிக்கை மற்றும் அரசாங்க முடிவுகளை தெரிவிக்க பயனுள்ள மற்றும் எளிமையான குறிகாட்டியாக செயல்பட்டது.
இப்போது, தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் நாம் கொரோனாவுடன் வாழும் கட்டத்திற்குச் செல்ல அனுமதித்துள்ளன.
கண்காணிப்பும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தரவை வெளியிடுவது இனி தேவையில்லை' என தெரிவித்தார்.