வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை
விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேற்றவுள்ளதாக பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
விசா காலாவதியான பின் புகலிடம் கோரும் சர்வதேச மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 15,000 மாணவர்கள் தங்கள் விசாக்கள் காலாவதியாகும் போது தஞ்சம் கோருவதாகப் பிரித்தானிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தங்குவதற்கு சட்டபூர்வ உரிமை இல்லையென்றால், உரிய நபர்கள் வெளியேற வேண்டும், அவ்வாறு வெளியேறவில்லை என்றால் குறித்த தரப்பினர் வெளியேற்றப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
புகலிடம் கோரும் மாணவர்களில் முதலிடத்தில் பாகிஸ்தானியர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.