உக்ரைனிலிருந்து உயிர் தப்ப ஓடி வந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட பிரித்தானியர்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து உயிர் தப்ப ஓடி வந்த பெண் ஒருவருக்கு உதவ முடிவு செய்த பிரித்தானியர் ஒருவர் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து தெரியவருவது,
உக்ரைன் நாட்டிலிருந்து உயிர் தப்ப ஓடி வந்த பெண் ஒருவருக்கு உதவ முடிவு செய்த பிரித்தானியர் ஒருவர், அவரது புகைப்படத்தைப் பார்த்ததும் தனது முடிவை கொஞ்சம் மாற்றிக்கொண்டார்.
உக்ரைனில் கணக்காளராக பணியாற்றி வந்த Vira Klimova (37), புடின் தன் நாட்டின் மீது போர் தொடுத்த நேரத்தில் அலுவலகத்திலிருந்து தன் வீட்டுக்குத் திரும்ப, தனது வீடு ரஷ்ய தாக்குதலில் சிதைந்துபோய்க் கிடப்பதைக் கண்டுள்ளார்.
உயிர் தப்ப உக்ரைனிலிருந்து வெளியேறிய Vira, நண்பர்கள் சிலர் உதவியுடன் பிரித்தானியாவின் Bristolஐ வந்தடைந்துள்ளார்.
இன்னொரு பக்கம், உக்ரைனிலிருந்து தப்பியோடி வருபவர்களுக்கு உதவும் நோக்கில் பேஸ்புக் குழு ஒன்றை பாவையிட்டுக்கொண்டிருந்த Luke Dickinson (28), Viraவைத் தொடர்புகொண்டிருக்கிறார்.
அவருக்கு உதவுவது என முடிவு செய்திருந்த நிலையில், தற்செயலாக Viraவின் புகைப்படம் கண்ணில் பட, உடனே அவரிடம் தன் மனதைப் பறிகொடுத்திருக்கிறார் Luke.
கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் பழக, ஒரு கட்டத்தில் தன் மனதில் உள்ள எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் Luke. பிரச்சினை என்னவென்றால், Lukeக்கு உக்ரைன் மொழி தெரியாது, Viraவுக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது.
அப்போது இருவருக்கும் கைகொடுத்தது, Google Translateதானாம். தாங்கள் சொல்ல நினைத்ததை மொழிபெயர்த்தே பேசிக்கொண்டாலும், இருவருக்கும் பொதுவாக இருந்த நகைச்சுவை உணர்வு இருவரையும் இன்னும் நெருக்கமாக்கியிருக்கிறது.
இதேவேளை, முறைப்படி திருமணம் செய்துகொண்டு தம்பதியராகியுள்ள Lukeக்கும், Viraவுக்கும் இன்னொரு ஆசை உள்ளது.
அது, போர் முடிந்ததும் உக்ரைனுக்குச் சென்று இன்னொரு முறை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாக உள்ளது.