பிரித்தானியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்
உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகளுக்கு நேற்று முதல் பிரித்தானியா அங்கீகாரம் அளித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க, தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்த்ததை அடுத்து, பிரிட்டன் அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் 22-ந் தேதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.