பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுபார்த்த இருவர் அதிரடி கைது!
பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கேஷ் தனது நண்பர் 32 வயதான கிறிஸ்டோபர் பெர்ரியுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனையடுத்து சீனாவுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டின்கீழ் அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் நேற்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டது.
இதேவேளை, அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.