கனடாவில் 100,000க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களின் வீசா கலாவதி
உக்ரைனில் தொடரும் ரஷ்யத் தாக்குதலால், கனடாவில் தற்காலிகத் தங்குமிட ஆவணங்கள் கொண்ட 100,000க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களின் வீசாக்கள் இந்த ஆண்டுக்குள் காலாவதியாக உள்ளன.
ஆனால், நிர்வாகத்திலான தடைகள் மற்றும் நீண்ட கால செயல்பாட்டு நேரம் காரணமாக, உக்ரைன் அமைப்புகள் கனடிய அரசாங்கத்திற்கு வீசாக்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனை கடுமையாக தாக்கிய பிறகு, "Canada-Ukraine Authorization for Emergency Travel (CUAET)" என்ற திட்டத்தின் கீழ், கனடாவில் வசிக்கவும் வேலை செய்யவும் 300,000 உக்ரைனியர்களுக்கு மூன்றாண்டு வீசா வழங்கப்பட்டது.
10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் பலரது வீசாக்கள் இப்போது காலாவதியாக உள்ளன. இதனால், CUAET பயனாளிகள் ஆன்லைன் மூலமாக மூன்றாண்டு நீட்டிப்பு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால், விசாக் கோரிக்கைகள் பின்னடைவு அடைந்துள்ளன, செயல்பாட்டு காலங்கள் நீண்டிருக்கின்றன, மேலும், உக்ரைனியன் பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால், கனடாவில் உள்ள உக்ரைனியர்கள் நிலை நிச்சயமற்றதாகியுள்ளது.