உக்ரைன் விவகாரம்; சர்வதேச நீதிமன்றத்தில் தொடங்கியது விசாரணை
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள 12 -வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில், ராணுவ கட்டமைப்புகளை தகர்ப்பதாக சொல்லிக்கொண்டு ரஷியா, அப்பாவி பொது மக்கள் மக்களையும், உக்ரைனின் முக்கிய நகரங்களையும் சின்னாபின்னமாக்கி வருகிறது.
ரஷ்யாவின் இந்த மீலேச்சத்தனமான தாக்குதலானது சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை தானே தேடிக்கொண்டுள்ளது. உக்ரைனின் தலைநகர் அருகே நடந்த போரில் குழந்தைகளும் பலியானமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து போரை நிறுத்துமாறு ரஷியாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த வாரம் உக்ரைன் முறையீட்டு இருந்தது.
அதன்படி உக்ரைன் முறையீடு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றம் என்ன மாதிரியான முடிவை அறிவிக்கப் போகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.