நாட்டின் 600 பகுதிகளில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டிய உக்ரைன் ராணுவம்
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாட்டின் 600 பகுதிகளில் ஆக்கிரமித்திருந்த ரஷ்ய துருப்புகளை துரத்திவிட்டு, அப்பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Kherson பிராந்தியத்தில் மட்டும் ஆக்கிரமிக்கப்பட்ட 75 பகுதிகளை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் மட்டும் 502 பகுதிகளை ரஷ்யா வசமிருந்து மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Donetsk பிராந்தியத்தில் மட்டும் 43 பகுதிகளை உக்ரைன் மீட்டுள்ளது, Luhansk பிராந்தியத்தில் 7 பகுதிகள். மேலும், உக்ரைன் பகுதிகளை ரஷ்ய துருப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுள்ளது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதிகரித்துள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மாதம் விளாடிமிர் புடின் தலைமையில் சிறப்பு விழா ஒன்றை முன்னெடுத்த ரஷ்யா, உக்ரைனின் Kherson, Donetsk and Luhansk, Zaporizhzhia ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்தது.
தற்போது உக்ரைன் ராணுவம் அந்த பகுதிகளில் இருந்து ரஷ்ய தரப்பை ஓட ஓட விரட்டி, கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.