அமெரிக்காவுக்கு பகீரங்கமான எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!
புடின் குறித்து பைடன் பேசியுள்ள கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நிலையில், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir putin) குறித்து, அமெரிக்க அதிபர் ஜே பைடன் (Joe Biden) அண்மையில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.
புடின் போர் குற்றவாளி என்றும், ஒரு கொலைகார சர்வாதிகாரி, மூர்க்கத்தனம் கொண்டவர் என்றும் ஜோ பைடன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், பைடன் விமர்சனத்திற்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜான் சல்லிவனை, நேரில் அழைத்து தமது எதிர்ப்பை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
புடின் குறித்த பைடன் கருத்துக்கள் ஏற்றுக் முடியாதவை என்றும், உயர்த்த பதவியில் இருப்பவருக்கு இது போன்ற வார்த்தைகள் தகுதியானதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா-அமெரிக்கா உறவு விளிம்பு நிலையில் இருப்பதாகவும், மீண்டும் இது தொடர்ந்தால் தூதரக உறவை முறித்துக் கொள்வோம் என்றும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.