துரோகிகள் ; உக்ரைனின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்!
யுக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்கள் இருவரை துரோகிகள் என்ற அடிப்படையில் பதவி நீக்கம் செய்ததாக உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) அறிவித்துள்ளார்.
இந்த தகவலை அதிபர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) இரவு நேர உரையில் வெளியிட்டார்.
இதுபோன்றவர்கள் தொடர்பாக இன்று மற்றொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எல்லா துரோகிகளையும் சமாளிக்க எனக்கு நேரம் இல்லை, ஆனால் அவர்கள் அனைவரும் படிப்படியாக தண்டிக்கப்படுவார்கள், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு நீக்கப்பட்ட இரு உயர் அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு, யுக்ரேன் மக்களுக்கு விசுவாசமாக இருக்காமல், ராணுவ உறுதிமொழியை மீறுபவர்கள் உயர் ராணுவ பதவிகளை இழக்க நேரிடும், என்றும் அதிபர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy0 எச்சரித்தார்.