ரஷ்யாவின் கொடூர தாக்குதலில் உக்ரேனின் மிகப்பெரிய கோடீஸ்வர தம்பதிகள் உயிரிழப்பு!
உக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரேனின் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் உக்ரைனின் மிகோலைவ் (Mykolaiv) துறைமுக நகரில் நடந்தது. உக்ரேனின் ஆகப் பெரிய தானிய உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளர் ஓலெக்ஸி வடாடூர்ஸ்கி (Oleksiy Vadatursky) ஆவார்.
74 வயதாகும் இவர் உக்ரேனின் 24ஆவது பணக்காரர் அவர். அவரது சொத்துக்களின் மதிப்பு சுமார் 430 மில்லியன் டாலர் என்று Forbes கூறுகிறது.
உக்ரைன் ரஷ்ய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய ஏவுகணை அவரது வீட்டைத் தாக்கியதில் ஓலெக்ஸி வடாடூர்ஸ்கி (Oleksiy Vadatursky) மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஓலெக்ஸி வடாடூர்ஸ்கி (Oleksiy Vadatursky) வேண்டுமென்றே குறி வைத்துத் தாக்கப்பட்டிருக்கலாம் என்று அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்க்கியின் (Volodymyr Zelenskyy) ஆலோசகர் கூறினார்.