போர்க்கைதியை கொன்ற ரஷிய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்த உக்ரைன்!
போர்க்கைதியை கொன்ற ரஷிய வீரருக்கு உக்ரைன்ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2022-ம் ஆண்டு தொடங்கியது. 3½ ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு உக்ரைன் ராணுவ வீரர் விட்டாலி ஹோட்னியுக் என்பவர் ரஷியாவில் பிடிபட்டார்.

டிமிட்ரி மற்றும் அவரது குழுவை சிறை பிடித்த உக்ரைன் ராணுவம்
போர்க்கைதியாக இருந்த அவரை ரஷிய ராணுவ வீரர் டிமிட்ரி குராஷோவ் (வயது 27) துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதனையடுத்து சபோரிஜியா பகுதிக்குள் நுழைந்த உக்ரைன் ராணுவம் டிமிட்ரி மற்றும் அவரது குழுவை சிறை பிடித்து சென்றது.
பின்னர் அவர்களுக்கு எதிரான வழக்கு உக்ரைன் ராணுவ கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டை டிமிட்ரி ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அவர் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி ரஷியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உக்ரைன் ராணுவ நீதிம்ன்றம் தீர்ப்பளித்துள்ளது.