ரஷ்யாவை கிண்டல் அடித்த உக்ரைன்!
வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதம் வாங்குவது குறித்து உக்ரைன் கிண்டலான கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில், நேட்டோ அமைப்பின் தரத்திற்கு உக்ரைன் நகரும் அதே வேளையில், ரஷ்யா வடகொரிய தரத்திற்கு செல்கிறது என குறிப்பிட்டுள்ளது.
இது ஆயுதத் துறைக்கு மட்டுமல்ல, அரசியல் துறைக்கும், வாழ்க்கைத் தரத்திற்கும் பொருந்தும் என்பதை இது காட்டுகிறது. உக்ரைனில் நடக்கும் போருக்காக வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவிடம் இருந்து லட்சக்கணக்கான ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்க ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுதத் துறையில் வல்லரசு நாடான ரஷ்யா, ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளின் விளைவால் இவ்வாறு வடகொரிய ஆயுதங்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்தத் தடைகள் காரணமாக, உக்ரைனில் போருக்குத் தேவையான வெடிமருந்துகளை போதுமான அளவு இருப்பு வைத்திருப்பது ரஷ்யாவுக்கு கடினமாகிவிட்டது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
தற்போது ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான உறவுகள் வளர்ந்து வருகின்றன. உக்ரைன் போருக்கு அமெரிக்காவே காரணம் என வடகொரியா சமீபத்தில் கூறியது.
மேற்குலகின் மேலாதிக்கக் கொள்கைகளால் ரஷ்யா தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வடகொரியாவும் ரஷ்யாவும் எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்ததாகவும் வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.