சீனா மத்தியஸ்தம்... உக்ரைன் போர் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி கோரிக்கை
உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையேயான போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாங்காக்கில் நடந்த பசிபிக் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், உக்ரைன் போரும் உங்கள் பிரச்சனைதான் என பார்த்தால்தான் இதில் நிலைப்புத்தன்மை உருவாகும் என ஆசிய நாடுகளின் கருத்தை கோரினார்.
மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் எனவும், எதிர் வரும் மாதங்களில் சீனாவால் இவ்விவகாரத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார சரிவிலிருந்து மீள உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை உலக நாடுகளின் தலைவர்கள் எடுத்து வருகிறார்கள். அதன் ஓர் பகுதியாகத்தான் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் இந்தப் பேச்சும் பார்க்கப்படுகிறது.