750 மைல்கள் தனியாக பயணம் செய்து தஞ்சம் அடைந்த உக்ரேனிய சிறுவன்!
உக்ரைன் மீது ரஷியா இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் ரஷ்யா - உக்ரைன் போரினால் 17 லட்சம் உகரைன் மக்கள் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். ரஷியபடைகள் சபோரிஜியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை தாங்கியபோது, சபோரிஜியாவில் இருந்த ஜூலியா என்பவர் தனது 11 வயது மகன் பிரேவ் ஹசனையாவது காப்பாற்ற வேண்டுமென கருதி அருகில் 750 மைல் தூரத்தில் உள்ள சுலோவாகியாவுக்கு தனியாக அனுப்பி வைத்தார்.
ஹசன் தனது பாஸ்போர்ட், அம்மாவின் எழுதி கொடுத்த கடிதம் மற்றும் கையின் பின்புறத்தில் எழுதப்பட்ட தொலைபேசி எண்ணுடன் மட்டுமே அங்கிருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் சிறுவன் ஹசன் 750 மைல்களுக்கு மேல் பயணம் செய்து சுலோவாக்கியா எல்லையை சென்றடைந்தார். சிறுவனை கண்டு திகைத்துப் போன தன்னார்வலர்கள் சிறுவன் வைத்து இருந்த கடிதத்தைப் படித்துவிட்டு, அவரது கையில் எழுதப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு , சிறுவனின் உறவினர்கள் அவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
அதிகாரிகள் சிறுவனுக்கு உண்வு வழங்கிய பின்னர், சிறுவனின் "புன்னகை, அச்சமின்மை மற்றும் உறுதிப்பாட்டிற்கு" பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து சிறுவன் ஹசனின் அம்மா ஜூலியா கூறுகையில்,
நான் ஒரு விதவை, எனக்கு அதிகமான குழந்தைகள் உள்ளனர். எனது மகனை கவனித்து, எல்லையை கடக்க உதவிய சுலோவாக்கியா தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என கண்ணீருடன் கூறினார்.
